தங்கம் என்பது ஒரு முதலீட்டு பொருளாகவே உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீது அதிகளவில் மோகம் உள்ளது. தங்கத்தை அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID எண் இல்லாமல் தங்க நகை மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு  அறிவித்துள்ளது.

இப்புதிய அறிவிப்பு மூலம் மக்கள் இனி தங்க நகை வாங்க கடைகளுக்கு செல்லும் போது BIS ஹால்மார்க் முத்திரை மட்டும் அல்லாமல் 6 இலக்க HUID இருக்கா என்பதை உறுதி செய்துக்கொண்டு வாங்க வேண்டும். தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்ய தற்போது பயன்பாட்டில் இருக்கும் 4 இலக்க HUID எண்ணை 6 இலக்காக மாற்றி கட்டாயமாக்கியுள்ளது.

எனவே நகைக்கடைகளில் இனி ஹால்மார்க் அடையாள எண் உள்ள நகைகளை மட்டுமே பார்த்து வாங்க வேண்டும். தங்க நகைகளில் பதிக்கப்படும் ஆறு இலக்க எண்ணெழுத்து அடையாளம் தான் ஹால்மார்க் அடையாள எண் ஆகும். இந்நிலையில் பழைய தங்க நகைகளை இனி விற்பனை செய்யவோ அடமானம் வைக்கவோ முடியாதா? என்று மக்களிடையே பெரும் சந்தேகம் ஒன்று உருவாகி உள்ளது. மேலும் பழைய தங்க நகைகள் செல்லுமா?எனவும் சாதாரண மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து நகைக்கடைகள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், பழைய நகைகள் செல்லுமா? என்ற சந்தேகம் மக்களுக்கு தேவை கிடையாது. ஏப்ரல்1 இன்று தேதி முதல் முதல் விற்பனைக்கு வரும் புதிய ந கைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் அடையாள எண் விதிமுறை வந்துள்ளது. பழைய தங்க நகைகள் இருந்தால் தாராளமாக கொண்டு வரலாம். நகையின் தரத்திற்கு ஏற்ப சந்தை மதிப்பில் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் பழைய நகைகளை வழக்கம்போல அடமானம் வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.