அர்ஜுன் டெண்டுல்கரின் விஷயத்தில் ஹர்திக் பாண்டியாவைப் போல ரோஹித் சர்மா செய்ய மாட்டார் என கூறப்படுகிறது..

ஐபிஎல் 2023ல் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. எனவே இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் இருக்கிறது. கேப்டன் ரோஹித் அர்ஜுன் டெண்டுல்கரின் விஷயத்தில் பெரிய ரிஸ்க் எடுக்கலாம். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அப்படி ஒரு நிலையை எதிர்கொண்டார். ஆனால் அவர் ரோஹித் சர்மாவைப் போல் ரிஸ்க் எடுக்கவில்லை.

முதலில் ஹர்திக் பாண்டியாவும், இப்போது ரோஹித் சர்மாவும் இப்படி ஒரு விசித்திரமான சூழ்நிலையில் சிக்கியுள்ளனர். கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய ஓவரைப் பார்ப்போம். நடப்பு சீசனில்  ஒரு ஓவரில் இது அதிகபட்ச ரன்னாகும்.

அதுவரை மும்பைக்கு எல்லாம் நன்றாக தான் இருந்தது :

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 15வது ஓவர் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எல்லாம் நன்றாகவே இருந்தது. பஞ்சாப் முதலில் பேட்டிங் தொடங்கியது. இப்போட்டியில் மும்பை அணி எளிதாக வெற்றி பெறும் என்று தோன்றியது. பஞ்சாப் இன்னிங்ஸில் 16வது ஓவரை வீச அர்ஜுன் டெண்டுல்கர் வந்தார். அதன் பிறகு மொத்த ஆட்டமும் மாறிவிடும்.

இருவரும் சேர்ந்து அர்ஜுன் டெண்டுல்கரை விளாசினர் :

மும்பை கேப்டன் ரோகித் சர்மா பந்தை அர்ஜுன் டெண்டுல்கரிடம் ஒப்படைத்தார். ஏனெனில் முதல் இரண்டு ஓவர்களில் 17 ரன்களுடன் 1 விக்கெட் எடுத்தார். பஞ்சாப் அணியின் சாம் கரன், ஹர்பிரீத் பாட்டியா ஆகியோர் கிரீஸில் இருந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய ஓவர் (அதிக ரன்) தேவைப்பட்டது. இருவரும் இணைந்து அர்ஜூன் டெண்டுல்கரின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

ஒரு ஓவரில் ஆட்டம் முடிந்தது :

அர்ஜுன் வீசிய இந்த ஓவரில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. கரன் மற்றும் பாட்டியா மொத்தம் 31 ரன்கள் எடுத்தனர். அதனால் இந்தப் போட்டியில் அர்ஜுனின் பந்துவீச்சில் எக்கனாமி மாறியது. 3 ஓவர்களில் 48 ரன்கள் மற்றும் 1 விக்கெட்டை வீழ்த்தி மோசமான சாதனை படைத்தார். இந்த ஒரு ஓவரில் ஆட்டம் மாறியது. மும்பைக்கு சாதகமாக இருந்த ஒரு போட்டி பஞ்சாப் அணிக்கு சாதகமாக சாய்ந்தது.

அதன் பிறகு ஹர்திக் எந்த ரிஸ்க்கும் எடுக்கவில்லை :

அர்ஜுன் டெண்டுல்கர் 1 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதற்கு முன், இதேபோன்ற அவமானகரமான சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் யாஷ் தயாள் படைத்திருந்தார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து ஆட்டத்தை முடித்தார். அந்த போட்டிக்கு பிறகு யாஷ் தயாளை மீண்டும் களத்தில் காண முடியவில்லை. ஹர்திக் பாண்டியா அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை..

ரோஹித் அதை செய்ய மாட்டார் :

அர்ஜுன் விஷயத்தில் ரோஹித் சர்மா அப்படி செய்ய மாட்டார். அவர் ரிஸ்க் எடுப்பார், அர்ஜுனுக்கு இன்னொரு வாய்ப்புகொடுப்பார் என கூறப்படுகிறது.. ஏனெனில் இந்த ஒரு ஓவரை தவிர்த்து இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் அர்ஜுன் சிறப்பாக பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.