
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அதில் ஒன்று எஸ்பிஐ வருடாந்திர வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் போது, முதலீடு முடியும் காலத்தில் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
இல்லையெனில் இஎம்ஐ வடிவில் ஒரு நிலையான வருமானம் கிடைக்கும். அதோடு நீங்கள் முதலீடு செய்வதற்கான வட்டியும் கிடைக்கும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 3, 5, 7, 10 வருடங்கள் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு தனிநபரோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களோ சேர்ந்து பயன் பெறலாம்.