
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த வருடம் கேரளா வயநாட்டில்… யாரெல்லாம் காங்கிரஸ் அலுவலகத்தை சேதப்படுத்தினார்களோ, அவர்களுடன் எல்லாம் தற்போது கூட்டணி அமைத்துள்ளார்கள்.வெளியில் நீங்கள் உங்களது லேபிளை மாற்ற முடியும். ஆனால் பழைய விஷயங்கள் என்ன ஆகும் ? அந்த நினைவுகள் எல்லாம் எங்கே செல்லும். இவை அனைத்தையும் நீங்கள் மறைத்து விட முடியாது. இப்போது இவர்களுடைய நிலைமை என்ன ?
இப்போதைய நிலைமையில் இவர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துள்ளனர். ஆனால் நிலைமை மாறும் போது இவர்கள் கைகளில் இருக்கும் கத்தி வெளிப்படும். மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே… இந்த கமெண்ட்டியா கூட்டணி நாட்டில் வாரிசு அரசியலின் ஒரு சின்னமாகும். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் நமது அரசியல் சட்ட சபையை உருவாக்கியவர்கள் எப்போதும் குடும்ப ஆட்சியை எதிர்த்து இருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், என பலர் வாரிசு அரசியலை எதிர்த்து இருக்கிறார்கள். நீங்கள் எத்தனை பெயரை எடுத்தாலும் இவர்கள் அனைவரும் குடும்ப அரசியலை வாரிசு அரசியலை எதிர்த்து இருக்கின்றார்கள். ஏனென்றால் குடும்ப அரசியலில் நஷ்டம் என்னவென்றால் ? நாட்டின் சாதாரண மக்கள் இந்த நஷ்டத்தை ஏற்க வேண்டிய சூழல் உள்ளது.
குடும்ப அரசியல் சாதாரண குடி மக்களுக்கு அவர்களின் உரிமையை பறித்து விடுகிறது. எனவே இந்த பெரிய மனிதர்கள் இந்த விஷயத்தை பற்றி அழுத்தம் தந்து இருக்கின்றார்கள். குடும்பம் – பணம் இவற்றின் அடிப்படையில் அமைகின்ற அரசை அவர்கள் எதிர்த்திருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் எப்போதும் இதனை சிந்தித்ததில்லை. மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… நாங்கள் எப்போதும் குடும்ப அரசியலை எதிர்த்து இருக்கிறோம். இதன் விளைவை நாங்கள் பார்த்துள்ளோம்.
காங்கிரஸுக்கு குடும்ப அரசியல் விருப்பம். நாடக அரசியல் விருப்பம். அவர்களுடைய பேரன் பேத்திகளும் பெரிய பதவிகளுக்கு வர வேண்டும்.குடும்பத்தைவிட்டு வெளியில் இருக்கின்றார்கள் அவர்களுக்கும், இதே தான். இந்த எண்ணத்தில்… இந்த மாளிகையில் இருந்து தர்பார் நடத்தும் போது உங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பே இல்லை. எத்தனை பேரின் உரிமைகளை அவர்கள் பறித்துள்ளார்கள் தெரியுமா ? என விமர்சனம் செய்தார்.