இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பலரும் கூகுள் பே செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கூகுள் பே மூலமாக சிறு வணிகர்களுக்கு சிறிய தொகையுடன் கூடிய கடன் வழங்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு Sachet லோன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த வசதியை வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் ஒத்துழைத்து செய்ய கூகுள் பே திட்டமிட்டுள்ளது.

இந்த வசதி மூலமாக டாக்குமெண்ட் சரி பார்த்து போன்றவை இல்லாமல் விரைவில் கடன் பெற முடியும். இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்காக ஃபெடரல், கோடக் மஹிந்திரா, HDFC வங்கி மற்றும் ICICI உள்ளிட்ட நான்கு வங்கிகளுடன் கூகுள் கூட்டு சேர்ந்துள்ளது. இதில் கடன் பெறுவதற்கு முதலில் Google Pay for Business  என்ற ஆப்பை திறந்து அதில் கடன் பகுதிக்குச் சென்று ஆஃபர்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு தேவைப்படும் கடன் தொகையை உள்ளிட்டு பின்னர் google pay வைத்துள்ள வங்கி தளத்திற்கு சென்றதும் கேஒய்சி உட்பட சில படிகளை முடித்த பின்னர் உங்களுக்கு கடன் கிடைக்கும்.