திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவரும் நிலையில் திருப்பதி மலை பாதையில் கரடி மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் போன்றவை அடிக்கடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு புதிய நிபந்தனை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி திருப்பதி மலை பாதையில் மீண்டும் கரடி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி எனவும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.