கூகுளை இன்ஸ்டால் செய்யும் போது கேட்கப்படும் நீண்ட நெடிய (அ) புரிந்துக்கொள்ள சலிப்பை ஏற்படுத்தும் கேள்விகளால் வேலை முடியவேண்டும் என்பதற்காக பல அனுமதிகளை கொடுப்பதே நாம் கூகுளின் கண்காணிப்பு வளையத்திற்குள் வருவதற்கு காரணம் ஆகும். பயனாளர்களின் வசதி மற்றும் விருப்பங்களின் படி பரிந்துரைகளை வழங்க அவர்களின் செயல்பாட்டை கூகுள் கண்காணிக்கிறது. எனினும் கூகுள் தன் செயல்பாட்டை கண்காணிக்க அனுமதிக்கிறாரா? இல்லையா? என்பது பயனரின் கைகளில் இருக்கிறது. இதற்கென பயனாளர் தன் தொலைபேசியில் ஒரு சிறிய அமைப்பை உருவாக்கவேண்டும்.

அதன்படி முதலில் உங்களது ஸ்மார்ட்போன் (அ) இணைய உலாவியிலுள்ள My Activity பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு குரோம் பிரவுசரில் https://myactivity.google.com/myactivity எனும் இணையதளத்திற்கு செல்லவும். முகப்பு பக்கத்தில் Google My Activity எனும் பேனரை காணலாம். இந்த பேனருக்கு கீழே இணையம் மற்றும் பயன்பாட்டு செயல்பாடு, இருப்பிட வரலாறு மற்றும் YouTube வரலாறு போன்ற 3 விருப்பங்களை காண்பீர்கள்.

பொதுவாக இந்த 3 விருப்பங்களும் இயக்கத்தில் இருக்கும். இதை ஒவ்வொன்றாக அணைக்கவேண்டும். அதன்பின் உங்களது செயல்பாடுகளை கண்காணிப்பதை கூகுள் நிறுத்திவிடும். செயல்பாடு கண்காணிப்பில் Google-ன் சேவைகளில் நீங்கள் செய்த ஒவ்வொரு செயலின் வரலாற்றையும் பார்க்கலாம். நீங்கள் விரும்பினால் அதை நீக்கலாம். இதன் காரணமாக இத்தகவலை யாரும் அணுகமுடியாது.