11 ஆண்டுகளுக்கு மேலாக டேக் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் கூகுள் குரோம் காஸ்ட்டுக்கு குட் பை சொல்லி கூகுள் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது செல்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவியில் பார்ப்பதற்காக கூகுள் குரோம் காஸ்ட் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்களுக்கு உதவியாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு மாற்றாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கூகுள் டிவி ஸ்ட்ரீமரை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கூகுள் டிவி ஸ்ட்ரீமர் இரண்டு நடுநிலை வண்ணங்களில் கிடைக்கிறது: பீங்கான் மற்றும் ஹேசல். கூகுள் டிவி ஸ்ட்ரீமர் 800க்கும் மேற்பட்ட இலவச சேனல்களுடன் நேரடி டிவியுடன் கூடுதலாக YouTube TV, Netflix, Disney+, Apple TV போன்ற ஸ்ட்ரீமிங் ஆப்ஸ் மூலம் 7 ​​லட்சத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான அணுகலை வழங்குகிறது.