டுவிட்டரில் நடிகர்கள், நடிகைகள் ஆகிய திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டுத் துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறையில் உள்ள பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வமான கணக்கை அடையாளம் காண “ப்ளூ டிக்” வசதி பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து மெட்டா நிறுவனமும் தன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளில் “ப்ளூ டிக்” வசதி செய்துள்ளது. இந்நிலையில் Google நிறுவனமும் ப்ளூ டிக் வெரிபிகேஷனை சரிபார்க்கப்பட்ட விளம்பரதாரர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இதை சோதனை முறையில் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது டுவிட்டரில் ப்ளூ டிக்கிற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மெட்டா நிறுவனமும் தன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளிலும் “ப்ளூ டிக்” வசதியை பெற சென்ற மாதம் முதல் கட்டணம் வசூலித்து வருகிறது. இக்கட்டணம் அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது. இப்போது Google நிறுவனமும் ப்ளூ டிக் வெரிபிகேஷனிற்கு கட்டணம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.