தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக சிஎன்ஜி சிலிண்டர்கள் மூலம் இயங்கும் இரண்டு பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்துகளில் டீசலுக்கு பதில் மீத்தேன் வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சேலம் மற்றும் தர்மபுரி இடையே இயக்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மீத்தேன் வாயு 80 ரூபாய்க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ மீத்தேன் வாயுவால் 6 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து இயங்கும். ஆனால் ஒரு லிட்டர் டீசலில் நான்கரை கிலோமீட்டர் மட்டுமே பேருந்தை இயக்க முடியும். மேலும் மீத்தேன் வாயுவினால் பேருந்துகளில் எரிபொருள் செலவு குறைந்து வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.