சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில், வாடிக்கையாளருக்கு என்ன தேவையோ. அதை இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்ய வேண்டும்.

பின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால், தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே மதுபானம் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர், தானியங்கி மூலம் மது விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துள்ளார். தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வதற்கு எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.