
பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதற்காக ரயிலை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மக்கள் எந்தவித சிரமமின்றி பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதை தடுப்பதற்காக, UTS மொபைல் ஆப் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.
இந்நிலையில் இனிமேல் R- வாலட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகள் மற்றும் ATVM மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் பயணிகள் அனைவருக்கும் டிக்கெட் கட்டணத்திலிருந்து 3 சதவீதம் கேஷ் பேக் வழங்கும் நடைமுறையை இன்று முதல் ரயில்வே வாரியம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு R- வாலட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட கேஷ்பேக், தற்போது டிக்கெட் எடுக்கும் போதே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.