உலக அளவில் தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் பலர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு மாற்று வழியை கொண்டுவர அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை துணை குழு முயன்று வருகிறது.

அதன்பிறகு தற்போது விசா சலுகை காலத்தை 60 நாட்களில் இருந்து 180 நாட்களுக்கு நீட்டிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்த அவகாசம் கிடைத்தால் புது வேலை, மாற்று யோசனை மற்றும் நிவாரணம் போன்றவைகளுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.