இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை பல்வேறு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை பெங்களூரு, சென்னை, கோவை, சென்னை, நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்படுகிறது. இதற்கிடையில் சமீப நாட்களில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துகள் ஏற்பட்டது. எனவே  ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதைத் தடுக்க புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவையில் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘கவச்’ என்ற உள்நாட்டு தொழில்நுட்பத்தை வந்தே பாரத் சமீபத்தில் சோதனை செய்ததில் அது து வெற்றி பெற்றது. இதன் ஒரு பகுதியாக மதுரா-பல்வால் இடையே வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. லோகோ பைலட் பிரேக் போடவில்லை. இருப்பினும், கவாச் தொழில்நுட்பம் சிவப்பு சமிக்ஞையை உணர்ந்துள்ளது. உடனே ரயில் தானாகவே பிரேக் போட்டு சிக்னலில் இருந்து 10 மீட்டர் தொலைவில் ரயிலை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.