திருச்சி விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்துவதால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்நிலையில் திருவள்ளுவரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் என்பவரை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதேபோல் தஞ்சாவூரைச் சேர்ந்த அபூசலி என்பவர் எலக்ட்ரானிக் பொருட்களில் தாமிர கம்பி வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இரண்டு பயணிகளிடமிருந்து மொத்தம் 1 கிலோ 516 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.