திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி, என்னால் மறக்க முடியாத ஒன்று…. 2016 ஆம் ஆண்டு முதல் முதலாக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வருகின்றது. தேர்தலைப் போட்டியிடுவதற்கு…. நான் ஒரு தொகுதியைக் கேட்கிறேன். தலைவர் கிட்ட போய் சொல்கிறேன். நீ நேரா நேர்க்காணல் வா என சொல்லுறாங்க. அந்த  நேர்காணல் எல்லாம் முடித்துவிட்டு,  நான் சென்று விட்டேன்.…

அதன் பிறகு தொகுதி பங்கீடு நடக்கும். அண்ணன் துரைமுருகன் கண்டிப்பா அதை மறந்து இருக்க மாட்டாரு. அந்த தொகுதி பங்கீட்டில் முக்கியமான தலைவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். நான் போட்டியிட கேட்ட அந்த தொகுதியை இன்னொரு இயக்கத்தைச் சார்ந்த ஒரு தலைவர் கேட்கிறார். அப்படி கேட்கும்போது….  அதற்கான வாக்குவாதங்கள் நடக்கும் போது,

இன்றைக்கு நம்முடைய தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் சொன்ன ஒரே வார்த்தை,  இதை நான் என் மகனுக்கு கேட்கிறேன் என்ற மிக பெரிய வார்த்தை. இதை என்னிடம் வெளியே வந்ததற்கு பிறகு அண்ணன் துரைமுருகன் சொல்கிறார்…. என்னப்பா….  இப்படி ஒரு வாதம் நடந்துச்சுப்பா….  தளபதி திடீர்னு இப்படி ஒரு வார்த்தை சொன்னாருப்பா….

அப்பயும் அந்த தலைவர் போட்டி போட்டு இல்லை,  எங்களுக்கு வேணும்னு சொல்றாருப்பா…. ஆனால் எனக்கு தளபதி அப்படி சொன்ன உடனே எனக்கு கண்ணே கலங்கிடுச்சு என்று சொன்ன வார்த்தை, தளபதி வாயிலிருந்து என் மகனுக்காக கேட்கிறேன் என்று சொல்ல வச்சாரு பாத்தீங்களா…..  அண்ணன் EVKS இளங்கோவன் அவர்கள்…. அவருடைய உழைப்பிற்கும் நாங்கள் தான்….  எங்க மாவட்ட கழகம் தான் போயி, ஈரோடு இடைத்தேர்தலில்  அவர ஜெயிக்க வச்சுட்டு வந்தோம்னு சொன்னா….

அதற்கான ஒரு நன்றிக்கடன்…. அவ்வளவு பெரிய வார்த்தை…..  சொந்த பெத்த பிள்ளைக்கு கூட அப்படி பேசி இருக்க மாட்டார் தளபதி… நம்முடைய இளைஞர் அணி செயலாளர் MLA சீட்டு கேட்கும் போது, போய் வேலையை  பாரு அடுத்த தடவை தேர்தலில் நிற்கலாம் என்று சொன்னவர் தான் நம்முடைய தலைவர்… அப்படிப்பட்ட ஒரு அங்கீகாரத்தை எனக்கு வழங்கியது… உள்ளே நடந்ததை என்னிடம் சொன்ன, முதல் தலைவர் இங்கே அமர்ந்திருக்கிற, அண்ணன் துரைமுருகன் அவர்கள் தான். இதுப் போன்று பல்வேறு நினைவுகள் என்னால் சொல்ல முடியும் என பேசினார்.