சென்னை இளைஞரை பரிசு பொருட்கள் தருவதாக கூறி ரூ 1,22,000 பணத்தை இளம்பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார். 

சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவருக்கு சமீபத்தில் இளம் பெண் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் லண்டனில் தற்போது உள்ளேன். இந்தியாவிற்கு வர விரும்புகிறேன். என்னோடு சில பொருட்களையும் நான் எடுத்து வர விரும்புகிறேன். அந்த பொருள்கள் அனைத்தும் பல லட்சங்கள் மதிப்பு கொண்டது. ஆனால் சுங்க கட்டணம் ரூபாய் 1.22 லட்சம் செலுத்த பணம் இல்லாததால் நான் தற்போது சிக்கி தவிக்கிறேன். எனக்கு பணம் அளித்து உதவினால் உங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை அளிக்கும் வகையிலான பொருள்கள் என்னிடம் உள்ளன.

அதை உங்களிடம் பரிசாக தருவதாக கூறி ரூபாய் 1.22 லட்சம் பணத்தை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அந்த இளம் பெண் வாங்கியுள்ளார். பணத்தை வாங்கியவுடன் அழைப்பை துண்டித்த அவரை மீண்டும் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில்,

அசாம் மாநிலத்தில் இதற்காகவே பிரத்தியேகமான குழு ஒன்று செயல்பட்டு வருவதையறிந்து உடனடியாக அங்கு விரைந்த தமிழக காவல்துறையினர், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தவீதா கிளின்டன் ஆகியவரை ஆகியோரையும், அவர்களது கூட்டாளிகளான இரண்டு நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபர்களையும் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.