ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரை ஏமாற்றி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ரூ 5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை திருடி சென்றுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் ஜெயின் என்ற 41 வயது மதிக்கத்தக்க நபர் 12 வருடங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் வருகை தந்து அங்குள்ள தங்க நகைப்பட்டறையில், தங்கத்தை கட்டிகளாக கொடுத்து பின் அதை ஆபரணமாக மாற்றி மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் விற்று வியாபாரம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் இருவr  நடத்தி வந்த தங்க நகை பட்டறையில் தொடர்ச்சியாக ஆர்டர் கொடுத்து வந்துள்ளார். அவரது நம்பிக்கையை இருவரும் பெற்ற பின்பாக, சமீபத்தில் சுமார் 11 கிலோ 600 கிராமுக்கும் அதிகமான தங்க கட்டிகளை அவர்களிடம் கொடுத்து ஆபரணமாக செய்ய கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வெறும் 560 கிராமிற்கான நகையை மட்டுமே ஆபரணமாக செய்து கொடுத்த நிலையில், மீதம் ரூ 5 கோடி மதிப்பிலான பத்து கிலோ தங்க நகையை சுருட்டிக் கொண்டு இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதை அறிந்த விகேஷ் கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தப்பி சென்றவர்கள் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்கு சென்று தஞ்சம் அடைந்திருக்கலாம் என யூகித்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.