இந்திய அறிவியல் கழகம் 2024ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வுக்கான பதிவு காலக்கெடுவை அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. GATE 2024 குழு தாமத கட்டணம் இல்லாமல் பதிவு செய்வதற்கான காலகெடுவை அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

இன்ஜினியரிங் பட்டதாரி திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் gate2024.iisc.ac.in  என்ற இணையதளம் மூலமாக தங்களின் பதிவுகளை அக்டோபர் ஐந்தாம் தேதி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் பட்டதாரி திறன் தேர்வுக்கு செப்டம்பர் 29ஆம் தேதி 1.37 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால் இதற்கான காலக்கெடு தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.