சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்றும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பெருங்குடி குப்பை வளாகத்தில் செயல்பட்டு வரும் பயோ மைனிங் பணிகளை அவர் ஆய்வு செய்து தற்போதைய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் பிறகு தோட்ட கழிவுகள் மற்றும் இளநீர் குடுவைகள் போன்றவற்றையும் ஆய்வு செய்தார். இந்நிலையில் சென்னையில் அதிகரித்து வரும் குப்பைகள் தொடர்பாக ராதாகிருஷ்ணன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்‌. அப்போது குப்பைகளை மக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் குப்பைகளை பிரித்து கேஸ் தயாரிக்கும் ஆலை மாதவரத்தில் செயல்படுவது போன்று சேத்துப்பட்டிலும் அமைக்கப்படும் என்றார். அதோடு சென்னையில் வேறு சில 5 இடங்களிலும் குப்பைகளை பிரித்து கேஸ் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.