பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் தற்போது சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

பாலிவுட் சினிமாவில் அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து மிரட்டியுள்ள திஷா பதானி தற்போது தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது ஹீரோக்களை மிஞ்சும் அளவிற்கும் அதிரடியாக ஸ்டண்ட் செய்த வீடியோவை நடிகை திஷா பதானி தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கங்குவா படத்தில் தயாராகி வருகிறார் என்று கூறுகிறார்கள்.