
ரஷ்யாவில் படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் ரூபிள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகளை தொடர்ந்து மக்கள் தொகை விகிதத்தை அதிகரிக்க ரஷ்யா அரசின் ஊக்க தொகை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உயிரிழப்பவர்களின் விகிதத்தை விட பிறக்கும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது, மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேற்றம் செய்வது போன்ற காரணங்களால் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகின்றது. ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் மக்கள் தொகை விகிதத்தை மேலும் குறைக்கின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டு 5,99,600 குழந்தைகள் பிறந்துள்ளது இது மிகவும் குறையும்.
இந்நிலையில் ரஷ்யாவில் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் பொருட்டு பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு நிதி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 வயதுக்குட்பட்ட உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழு நேர மாணவர்கள் ஆகவும், கரேலியில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தப் பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 81 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது. ஆனால் பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை பிறந்த பிறகு நோய் காரணமாக உயிரிழந்தாலோ அல்லது குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊக்குத்தொகை வழங்கப்படுமா என்பது குறித்து தெரியவில்லை. மேலும் ரஷ்யாவில் பல்வேறு மாகாணங்களில் இது போன்ற ஊக்கு தொகை அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.