கோயம்புத்தூர் அருகே ஆன்லைன் வேலை என கூறி இளம்பெண்ணிடம் ரூ 8,00,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் நவீனமாகி  வருகிறது.  முன்பு நேரில் சென்று வாங்கிய உணவுப் பொருட்கள்,  வீட்டிற்கு தேவையான பொருள்கள்,  தனிமனிதனுக்கு தேவையான பொருட்கள் என அனைத்தையும் தற்போது  ஆன்லைனில் இருந்த இடத்திலிருந்தே  ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கிறோம்.  தற்போது இதைப் போலவே பார்க்கக்கூடிய வேலைகளையும் வீட்டில் இருந்தபடியே பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா ? என பல நபர்கள் இணையத்தில் தேட தொடங்கி விட்டனர்.  இதை சரியாக பயன்படுத்த நினைக்கும் மோசடி கும்பல் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க ஆன்லைன் வேலை தருவதாக விளம்பரப்படுத்தி அதன் மூலம் கவரப்பட்டு வரும் நபர்களை சுலபமாக ஏமாற்றி விடுகின்றனர். 

அந்த வகையில்,  கோயம்புத்தூர் பகுதியில் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற இளம் பெண் ஒருவர் சென்னை ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே மீதம் இருக்கும் நேரத்தில் பார்ட் டைமில் ஏதாவது வேலை பார்க்க முடியுமா ? என இணையத்தில் தேடியுள்ளார்.  அப்போது  வந்த விளம்பரம் ஒன்றின் மூலமாக அதற்கு அப்ளை செய்து அவர்கள் கொடுத்த ஒரு சில வேலைகளை செய்துள்ளார்.  அதற்கான கமிஷனாக உடனுக்குடன் அவருக்கு 1500 லிருந்து 2000 வரை அவ்வபோது அனுப்பப்பட்டு வந்தது.

  இதை கண்டதும் அதிகமாக அவர்கள் சொன்ன அனைத்து பணிகளையும் அவர் செய்திட வருமானம் லட்சத்தை தாண்டியது.  இந்நிலையில், இதுவரை சம்பாதித்த தொகையை விட பல மடங்கு பெரியது. எனவே நீங்கள்  முறையாக வரி செலுத்த வேண்டும்.  அதற்கான ரசீது எங்களுக்கு அனுப்பப்பட்டதன் பின்பு தான் இந்த பணத்தை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும் என அவர்கள் தெரிவிக்க,  அதை உண்மை என நம்பி எட்டு லட்சத்து 60 ஆயிரம் பணத்தை  அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிருக்கு அவர் அனுப்பியுள்ளார். 

அதன் பிறகு மோசடி செய்தவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.  இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் புகார் அளிக்க காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளால்  பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 196 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்தோ அல்லது cybercrime.gov.in  என்ற இணையதளத்தில் சென்றோ புகார் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.