சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் 7-வது தெருவில் ஜெய்சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது ராமாபுரத்தில் இருக்கும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஜெய்சுந்தர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக ஜெய்சங்கர் மோட்டார் சைக்கிளில் வேளச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பள்ளிக்கரணை சிவன் கோவில் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே பசுமாடு வந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஜெய்சங்கர் பசுமாடு மீது மோதி நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். மேலும் பின்னால் வந்த மாநகர அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி ஜெய்சுந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெய்சுந்தரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.