
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிர படுத்த வேண்டும்.
காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். மேலும் பூத் கமிட்டியை விரைவாக அமைத்து பட்டியலை தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார்.