சிலி நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் வெப்ப காற்று வீசு தொடங்கியுள்ளது. இதனால் சுமார் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயால் 34,500 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் 65 இடங்களில் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காட்டுத்தீயால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.