கியூபா நாட்டின் தலைநகர் ஹவானா ஆகும். இங்கிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் பினாரஸ் டி மயாரி என்ற மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரில் நன்கு வளர்ந்த காட்டு மரங்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கடந்த 18ஆம் தேதி காட்டுத்தீ பரவ தொடங்கியது.

இப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காட்டு தீ விடாமல் ஒரு வாரம் காலமாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதனால் சுமார் 2000 ஏக்கர் வனப்பகுதி தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைப்பதற்கு விமானங்களும் ஹெலிகாப்டர்களும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.