இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கடந்த மாதத்தில் இருந்து https://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்தனர்.

நாடு முழுவதும் 20 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுத இருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் நுழைவுச்சீட்டு அனுப்பப்படும் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவில் 499 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு மே 7-ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறும் என தற்போது தேசிய தேர்வு முகமை மூத்த இயக்குனர் சாதனா பிரஷார் கூறியுள்ளார்.