இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு உற்பத்தியை அதிகப்படுத்துதல் மற்றும் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் மின் நுகர்வை குறைக்கும் விதமாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அரசு அலுவலகங்கள் இன்று முதல் காலை 7.30 மணிக்கு தொடங்க வேண்டும். அதன் பிறகு அனைத்து பணிகளையும் மதியம் 2 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் காலை 7:30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சோதனை அடிப்படையில் மே 2-ம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் மேலும் நீடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.