
ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூலித்ததாக, ஹேமந்தர குமாரை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ரூ.39 கோடி மதிப்பிலான சொத்துகள் 18 கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், வெளிநாட்டுக்கு தப்பியோடிய 4 பேரை பிடிக்க ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது