செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, பிற நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை காண முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்ததால் நேற்று நடைபெறவிருந்த 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டது. உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் மட்டுமே நேற்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் நோயாளிகள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நேற்று 50க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சைகள் ஒத்திவைப்பு, முறையான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் எழுந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் பயனில்லை என நோயாளிகள் குமுறுகின்றனர்.
