சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருப்பவரின் உயிருக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது எனவும் திமுக அரசின் மீது எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனங்களை முன் வைத்தது.

இதைத்தொடர்ந்து தான் தற்போது சென்னை கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது சென்னையின் புதிய கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையின் 110-வது கமிஷனர் ஆக பொறுப்பேற்றுள்ளார். இவர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றிய நிலையில் தற்போது சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணிபுரிந்த அருண் ஐபிஎஸ் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டதால் அவருடைய அதிரடி நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.