
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. 2026 தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் சென்னையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் வடிவேலு 2026 தேர்தலிலும் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக வருவார். அதுவும் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வார். அவர் மக்களுக்காக நல்லது செய்வார். இதுவரை சொன்னதையும், சொல்லாத பலவற்றையும் மக்களுக்காக செய்து கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார். இதை பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.