
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மெட்ரோ பணிகளை ஆய்வு செய்தார். அதன்பிறகு முதலமைச்சர் கூறியதாவது, 2025 இறுதிக்குள் பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்திற்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன்.
நாட்டிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியை கொண்டு இரண்டாம் கட்ட பணிகளை செய்தோம். நம் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாக செயல்படுத்துகிறோம். கோவை-மதுரை மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.