தமிழகத்தில் இன்று (அக்.1) ஆயுத பூஜை மற்றும் நாளை (அக்.2) காந்தி ஜெயந்தி காரணமாக அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதனிடையே, அக்டோபர் 3ஆம் தேதி தொடர்ச்சியான அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் மற்றும் சில செய்தித் தளங்களில் வதந்திகள் பரவின. இந்த தகவல் பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும், அன்று எந்தவிதமான அரசு விடுமுறையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, அந்த நாளில் அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல இயங்கும் எனவும் அரசின் சரிபார்ப்பகம் அறிவித்துள்ளது.