ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் தந்தையும், ஓய்வுபெற்ற மூத்த உளவுத்துறை அதிகாரியுமான ஆர். கோவிந்தராஜன் (94) வயது மூப்பு காரணமாக காலமானார்.
1953-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், பின்னர் இந்திய உளவுத்துறையில் (ரா) இணைந்து, Joint Intelligence Committee-யின் தலைவராக உயர்ந்தார். தேசத்தின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை வளர்ச்சிக்காக முக்கிய பங்களிப்பு செய்தவராக போற்றப்பட்ட அவரது மறைவுக்கு அரசியல், நிர்வாக மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
