வங்கக் கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள ‘மோன்தா’ புயல், இன்று (ஆக. 28) மாலை ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது.
இதன் காரணமாக, புயலின் தீவிரம் மற்றும் கனமழை அபாயம் கருதி, சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படவிருந்த 12 விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதன் எதிரொலியாக, விமானப் பயணிகளின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
