மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே. இவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐசியூ வில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.

அவருக்கு இதய ரத்த குழாய்களில் அடைப்பு எதுவும் இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் ஹாஸ்பிடல் முன்பாக ஏராளமான சிவசேனா கட்சியினர் கூடியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ள நிலையில் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.