தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நிர்வாகக் குழுவில், அவரது தனிப்பட்ட நம்பிக்கைக்குரியவரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ‘சிறப்புப் பணி அதிகாரியாக’ (OSD) நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தவெக-வின் செய்தித் தொடர்பாளராகவும், முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும் அறியப்படும் இவருக்கு, தற்போது அரசுப் பதவியே வழங்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே அரசியல் பிரிவுக்கான ஆலோசனைகளை வழங்கி வந்த இவருக்கு, அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டதன் மூலம், கோட்டை நிர்வாகத்தில் இவரது செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
