பொறியியல் படிப்புகளுக்கு மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி முடிவுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் மே 7ஆம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதள த்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது