
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 69 வயதான ஜர்தாரி, காய்ச்சல் மற்றும் தொற்று காரணமாக கராச்சியிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள நவாப்ஷா நகரிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மருத்துவர்கள் அவரின் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை ரமழான் தொழுகையில் பங்கேற்பதற்காக நவாப்ஷாவுக்குச் சென்ற ஜர்தாரி, அதற்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை தனது கட்சித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பை நடத்தினார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தொலைபேசியில் அழைத்து ஜர்தாரியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.