
இந்திய அணியின் வீரர் ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணி அவரை 26.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவரை எடுக்க டெல்லி மற்றும் பஞ்சாப் அணி இடையே கடுமையான போட்டிகள் நிலவிய நிலையில் கடைசியாக பஞ்சாப் அணி எடுத்தது.
பஞ்சாப் அணி 2 இந்திய வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொண்டு ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில் ஒரு நல்ல கேப்டன் முதலில் தேவைப்பட்டது. அதன் காரணமாக ஸ்ரேயஸ் ஐயரை போட்டி போட்டு வாங்கியுள்ளது. மேலும் இதனால் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் இருப்பார் என்று கூறப்படுகிறது.