சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். காலையிலும் மாலையிலும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் களத்தில் இறங்கி தீவிர சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.