
நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி நாகை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அதிமுக கட்சியின் வேட்பாளர் சுர்ஜித் சங்கர், பாஜக வேட்பாளர் ரமேஷ் ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர். மேலும் இன்று காலை முதல் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.