நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என்ற விளக்கத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலமைச்சர் பெயர் கொண்ட திட்டத்திற்கு தடை கேட்டு அதிமுக எம்.பி சி.வி சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் இனியன் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
