விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் போது தான் முடிவு செய்வோம். முன்பாகவே எங்களுக்கு இவ்வளவு இடங்கள் வேண்டும் என நிபந்தனை வைக்க வாய்ப்பு இல்லை.
ஏற்கனவே எங்களுக்கு 10 தொகுதி கொடுத்துள்ளார்கள். எண்ணிக்கையை பெருக்க இருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என விரும்புவது இயல்பான ஒன்றுதான். கூட்டணியில் பல கட்சிகள் இருக்கும் போது அவற்றையெல்லாம் அனுசரித்து எங்கள் முடிவை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.
