நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என குற்றம் சாட்டி கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி என்பவர் தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகினார்.

தற்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் வைஷ்ணவி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.