ஆசிய மனிதவள மேலாண்மை கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதவள மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சமுதாயம் மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல் புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் உள்ள தலைமைத்துவ உறுதியையும், விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக முதல்வருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விருதை ஆசிய HRD விருதுகுழு தலைவரும் பக்ரைன் முன்னாள் அமைச்சர்ருமான பாமி ஜோவ்தார், மாலத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விருது குழுவின் துணைத்தலைவருமான முகமது வகித் ஆகியோர் வழங்கினர். மேலும் இந்தக் விருதை இந்தியாவில் 12 வருடங்களுக்குப் பிறகு ஒருவர் பெற்றுள்ள நிலையில் ‌இந்த விருது முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.