தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தற்போது தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் விழுப்புரம் போக்குவரத்து மண்டலத்தில் 322 காலி பணியிடங்களும், கும்பகோணத்தில் 756 காலி பணியிடங்களும், சேலத்தில் 486 காலி பணியிடங்களும், கோவையில் 344 காலி பணியிடங்களும், மதுரையில் 322 காலி பணியிடங்களும், நெல்லையில் 362 காலி பணியிடங்களும் இருக்கிறது. மேலும் இந்த பணிகளுக்கு www.arasubus.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.