இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு தொடரில் வக்பு மசோதா தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தெரியாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கல்யாண் பானர்ஜி ‌ ஆத்திரத்தில் திடீரென கண்ணாடி டம்ளரை உடைத்து விட்டார். இதில் கண்ணாடி டம்ளர் அவருடைய கையில் கிழித்ததில் ரத்தம் வந்து கைகளில் தையல் போடப்பட்டுள்ளது.

அதாவது பாஜக எம்பி தலைமையில் தான் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட நிலையில் பாஜகவை சேர்ந்த அபிஜித் காங்கோபாத்தியாய் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்யாண் பானர்ஜி கண்ணாடி கிளாஸ் உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரது ஆலோசனை கூட்டத்தில் இருந்து ஒரு நாள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அநாகரிகமாக நடந்து கொண்டதால் தற்போது அவரை ஒரு நாள் மட்டும் அந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.